தனுஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் , பின்னணி பாடகர் என்று பன்முகம் கொண்டவர் ஆவார். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . அது மட்டுமல்லாமல் இதுவரை ,
இரண்டு தேசிய விருதையும் வென்று இருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படி ஒரு நல்ல நடிகராக கலக்கி கொண்டு வந்த தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதன் பிறகு பல வருடங்கள் கழித்து ,
தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ். இந்த தகவலே தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்த நிலையில் தற்போது அடுத்த படம் இயக்குவதற்கும் தயாராகிவிட்டார் தனுஷ் . அந்த வகையில் தனுஷின் அக்கா மகனான பவிஸ் என்பவரை வைத்து,
புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம் தனுஷ். இந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகனுடன் இணைந்து அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் ,மேத்யூ தாமஸ் ,வெங்கடேஷ்,
ரபியா , ரம்யா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். தற்போது இந்தப் படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…