April 26, 2024

ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூணு கார் ..!! அனிருத்துக்கு இன்பதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன் ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

கடந்த மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால், ஜாக்கிசரப், விநாயகன் ,ரம்யா கிருஷ்ணன், தமன்னா ,யோகி பாபு , வசந்த் ரவி , மிர்னா மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விலை உயர்ந்த பி எம் டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதி மாறன் . அதோடு இயக்குனர் நெல்சனுக்கும் நாலு கோடி மதிப்புள்ள porsche காரை பரிசாக  கொடுத்திருந்தார் கலாநிதி மாறன்.  இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின்,

வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அனிருத்தின் இசையும் , பாடல்களும் தான் . அதனால் அவருக்கு ஏன் கார் கொடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் கொந்தளித்தனர் . ஒரு வழியாக அனிருத்துக்கும் கார் கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன்.  அந்த வகையில் மொத்தம் மூன்று,

கார்களை நிறுத்தி அதில் ஏதாவது ஒரு காரை தேர்ந்தெடுக்க சொல்லியிருக்கிறார் . அதில் நெல்சன் தேர்ந்தெடுத்த porsche  காரையே அனிருத்தும் தேர்ந்தெடுத்திருக்கிறார் .  தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *