வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளாவின் மகளான வனிதா கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு ,
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், அநீதி , அந்தகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை வனிதா விஜயகுமார் . இப்படி இத்தனை படங்களில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும் .
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் வனிதா விஜயகுமார் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமல்லாமல் மூன்று திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தார் நடிகை வனிதா விஜயகுமார் .
இதை அடுத்து தற்போது ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது . அந்த வகையில் சிறுவயதில் சிவாஜியுடன் ,
நடிகை வனிதா எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …