May 1, 2024

விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த் ..!! நல்லா இருக்காருன்னு சொல்லியே இப்படி ஏமாத்திட்டாங்களே..!! துக்கத்தில் வாடும் ரசிகர்கள் ..!!

கேப்டன் விஜயகாந்த் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார் விஜயகாந்த்.  பின்னர் பல வருட போராட்டத்திற்கு பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜயகாந்த்.  பின்னர் விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் விஜயகாந்த் . மேலும் இவர் வளர்ந்ததற்குப் பிறகு கஷ்டப்படும் இயக்குனர்களுக்கும்,  நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து உதவி செய்திருந்தார் . இதனால்தான் இப்போதும் விஜயகாந்தை ரசிகர்களும் , பிரபலங்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் .

இப்படி ஒரு உன்னதமான மனிதராக இருந்து வந்த விஜயகாந்த் அரசியலிலும் ஒரு கை பார்த்தார் . ஆனால் அவருடைய கெட்ட நேரமோ , என்னமோ உடல்நிலை சரியில்லாமல் பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் ,

அனுமதிக்கப்பட்டு பின்னர் பூரண குணம் அடைந்தார் விஜயகாந்த் . இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . குறிப்பாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது .

ஆனால் சற்று முன் சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்காரு நல்லா இருக்காருன்னு சொல்லியே இப்படி ஏமாத்திட்டாங்களே என்று துக்கத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *