மனோபாலா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மனோபாலா கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
பிள்ளை நிலா, சிறைப்பறவை ,ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ,கருப்பு வெள்ளை போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மனோபாலா ,
ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராகவே மாறினார் . அந்த வகையில் தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் மனோபாலா. இப்படி தொடர்ந்து நடித்து வந்த மனோபாலா சதுரங்க வேட்டை மற்றும் பாம்பு சட்டை போன்ற திரைப்படங்களையும்,
தயாரித்து இருக்கிறார். இதனிடையே திருமணமான நடிகர் மனோபாலாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் நடிகர் மனோபாலா .
இப்படியொரு நிலையில் பலரும் பார்த்திராத காமெடி நடிகர் மனோபாலாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …