April 30, 2024

அநியாயத்துக்கு ஒல்லியான 7ஜி சோனியா அகர்வால் ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

சோனியா அகர்வால் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சோனியா அகர்வால் கடந்த 2௦௦3 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகி அறிமுகமானார் . இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான கோவில் ,விஜய் நடிப்பில் வெளியான மதுர ,ரவி கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, ஆர்யா நடிப்பில் வெளியான ஒரு கல்லூரியின் கதை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சோனியா.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே  இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் பின்னர் ,

நான்கு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.  இதை அடுத்து தற்போது தமிழில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் ஒரு திரைப்படம் என்று மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சோனியா அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் .  காரணம் உடல் எடையை குறைத்து எலும்பும் , தோலுமாக மாறி இருக்கிறார் நடிகை சோனியா அகர்வால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *