தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இப்படி தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு நேற்று வெளியான மாமன்னன் ,
என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு ,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ,அழகம்பெருமாள்,
விஜயகுமார் , ரவீனா ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இதுவரை காமெடி நடிகராக பார்த்து வந்த வடிவேலு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை,
கண்கலங்க வைத்திருந்தார்,என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்லப் போனால் படத்தின் கதாநாயகனே வடிவேலு என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
அந்த வகையில் இந்த படத்தில் வடிவேலுவுக்கு இரண்டு முதல் மூன்று கோடி வரை சம்பளமாக கொடுத்ததாக கூறப்படுகிறது . அதுவும் இந்த படத்திலேயே வடிவேலுக்கு மட்டும் தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது…