May 6, 2024

நடிக்க மட்டுமல்ல நன்றாக பாடவும் வரும் ..!! பாடகராக மாறிய விக்ரமின் மகன் ..!! அதுவும் இந்த டாப் நடிகரின் படத்திலா ..??

துருவ் விக்ரம் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல்  திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வர்மா என்ற படத்தில் நடித்திருந்தார் .

ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மோசமான வரவேற்பையை பெற்று தந்தது . பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்  வெளியான மகான் படத்தில்  விக்ரமின் மகனாக நடித்திருந்தார் நடிகர் துருவ் விக்ரம்.  இதன் பிறகு பட வாய்ப்புகள்,

எதுவும் இல்லாமல் இருந்து வந்த நடிகர் துருவ் விக்ரம் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் ஒரு நடிகராக பரிச்சயமான நடிகர் துருவ் விக்ரம் தற்போது பிரபல நடிகருக்காக ,

ஒரு பாடலை பாடியிருக்கிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் நானி தான்.  அந்த வகையில் நானி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஹாய் நானா . இந்த படத்தில் இடம் பெற்ற ” ஓடியம்மா ”  என்ற பாடலை பாடி இருக்கிறாராம் நடிகர் துருவ் விக்ரம்.

மேலும் இவர் இதற்கு முன்பே பல தமிழ் படங்களில் இடம்பெற்ற ஒரு சில பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *