April 29, 2024

அஜி த்தின் தீவி ர ரசி கராக இ ருந்த சி ம்பு ..!! திடீரெ ன வி ஜய் ரசிகரா க மா றிவி ட்டா ரா ..?? எல்லா த்து க்கும் கா ர ணமே அ ந்த ப டம் தா ன் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும்  சிம்பு ஆரம்பத்திலிருந்து தன்னை அஜித்தின் ரசிகராகவே காட்டிக் கொண்டு வருகிறார்.  அதுவும் அஜித்தின் படம் வெளியானால் போதும் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதிப்பார் நடிகர் சிம்பு .

அந்த அளவிற்கு நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார் நடிகர் சிம்பு . ஆனால் சமீப காலமாக எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை அவ்வளவாக காட்டிக் கொள்வதில்லை நடிகர் சிம்பு . இதனால் இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என்று,

பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . அதற்கான காரணம் என்னவென்றால்,  நடிகர் சிம்பு அஜித் ரசிகர் என்று எல்லா இடத்திலும் கூறி வந்தாலும் இதற்கு அஜித் எதுவும் சொன்னது இல்லையாம் . அது மட்டுமல்லாமல் சிம்பு நடித்த வாலு திரைப்படம் வெளியாகாமல்,

பல பிரச்சினைகளில் சிக்கியது.  அப்போது நடிகர் விஜய் ஏதாவது உதவி வேண்டுமா என்று சிம்புவிடம் கேட்டிருந்தார் . ஆனால் அப்போது அஜித் இதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லையாம் . இதனால் தான் நடிகர்  சிம்பு இப்படி மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது .

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்காக ஒரு பாடலை சம்பளமே வாங்காமல் பாடியிருந்தார் நடிகர் சிம்பு . இதனால் அஜித் ரசிகராக இருந்த சிம்பு திடீரென விஜய் ரசிகராக மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *