April 26, 2024

19 வது வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் ரீல் மகள் ..!! சின்ன பொண்ணு இப்ப பெரிய பொண்ணு ஆயாச்சு ..!! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள் ..!!

அனிகா சுரேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ,

நானும் ரௌடி தான், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் ,அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம்,  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை அனிகா.  பின்னர் வளர்ந்ததும் தற்போது,

கதாநாயகியாகவும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை அனிகா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா நேற்று தன்னுடைய 19ஆவது பிறந்த நாளை தன்னுடைய அம்மாவுடன் கொண்டாடியிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அனிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *