April 23, 2024

விஜய்யுடன் கூட்டணியா ..?? சூசகமாக சொல்லிய கமல் ..!! தம்பியுடையான் படைக்கு அஞ்சான் ..!!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . மேலும் ரசிகர்களும் அவருக்காக தான் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் . குறிப்பாக நடிகர் விஜய்யை போலவே அரசியல் ஆசையில் பல பேர் அரசியலில் களமிறங்கி தோல்வியை சந்தித்துள்ளனர் . அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் கமல்ஹாசன் . சில வருடங்களுக்கு முன்பே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை,

தொடங்கிய கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்டு படுத்து தோல்வியை சந்தித்தார் . இதன் பிறகு அரசியலில் இருந்து முழுநேர சினிமா நடிகராக மாறினார் நடிகர் கமல்ஹாசன் .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியலுக்கு வருவது,

குறித்து கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதிலளித்த கமல்ஹாசன்,  இது அவருடைய இஷ்டம் . அவர் செய்யும் செயல்கள்  வேறு , நான் செய்யும் செயல்கள் வேறு என்று கூறியிருந்தார் . அதோடு விஜய் உடன் கூட்டணி வைப்பீர்களா .? என்ற கேள்விக்கு விஜய்யை அரசியலுக்கு,

வர சொல்லி முதன் முதலில் அவருக்கு ஊக்கம் கொடுத்ததே நான் தான் . அதுவும் என்னுடைய அலுவலகத்தில் வைத்து தான் இதை பேசினோம் என்று சொல்லி அப்படியே அந்த கேள்வியை மழுப்பிவிட்டார் கமல்ஹாசன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *