May 6, 2024

ஷங்கரை மிஞ்சிய பிரம்மாண்டம் ..!! ஹாலிவுட் தரத்தில் உருவாகும் தமிழ் நடிகரின் படம் ..!! யாருமே எதிர்பார்க்காத ஒன்று ..!!

பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரம்மாண்டம் என்று சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது இயக்குனர் ஷங்கரின் பெயர் தான் . அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே வைத்திருக்க மாட்டார் இயக்குனர் ஷங்கர் . அது மட்டுமல்லாமல் பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவரையே சேரும் .

அப்படி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும்  இந்தியன் 2 படத்தில் இளம் வயது கமலை காட்டுவதற்காக புதிய டெக்னாலஜி ஒன்றை பயன்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர் . இப்படி இருக்கும் நிலையில் அதே டெக்னாலஜியில் தற்போது பிரபல நடிகரின் படமும் உருவாக உள்ளதாம் .

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான்.  தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்,

தயாரிக்க இருக்கிறது . பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம் . அப்படி வயதான கதாபாத்திரம், இளமை கதாபாத்திரம் என்று இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதால் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்திய அதே டெக்னாலஜியை,

தற்போது தளபதி 68 படத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறார்களாம் . இதற்காக இயக்குனர் ஷங்கர் சென்ற அதே ஸ்டுடியோவுக்கு சென்று இருக்கிறார்  நடிகர் விஜய் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *