April 23, 2024

பாவாடை  தாவணியில் ரசிகர்களை மயக்கும் ” பிக்பாஸ் ” ஜனனி ..!!

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பலபேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் பிக் பாஸ் ஜனனி குணசீலன்.  ஆரம்பத்தில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த ஜனனி பிக் பாஸ் 6 மூலம் போட்டியாளராக கலந்து கொண்டார்.  அப்படி இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய இலங்கை தமிழால் ,

தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ஜனனி.  இன்னும் சொல்லப்போனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் இவருக்கு விஜயுடன் நடிக்க வாய்ப்பு வந்தது . அந்த வகையில் கடந்த வருடம் ,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனனி.  இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறாராம் ஜனனி.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில் பாவாடை  தாவணியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *