May 2, 2024

பிரபுவின் மகளை கரம்பிடித்த ” மார்க் ஆண்டனி ” இயக்குனர் ..!! வயது வித்தியாசம் பார்க்காமல் நடந்த திருமணம் ..!! வெளிவந்த திருமண புகைப்படங்கள் உள்ளே ..!!

ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,  பஹீரா போன்ற படங்களை இயக்கியிருந்தார் . இருந்தாலும் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ,

வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.  இந்நிலையில் 32 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்த ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகளும்,  சிவாஜி கணேசனின் பேத்தியமான ஐஸ்வர்யாவை,

இன்று கரம் பிடித்திருக்கிறார் . மேலும் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.  இப்படி இருக்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும்,  ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது . அதனால் வயது வித்தியாசம் கூட ,

பார்க்காமல் இருவருக்கும் இன்று திருமணம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர் .  இதோ அந்த திருமண புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *