April 22, 2024

ஓய்வு எடுப்பதற்கு அழகிய பண்ணை வீடு ..!! சொந்த ஊரிலேயே கட்டிய சத்யராஜின் மகன் ..!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் ..!!

சிபிராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் கடந்த 2௦௦3 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜோர் ,மண்ணின் மைந்தன் ,வெற்றிவேல் சக்திவேல் ,கோவை பிரதர்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் சிபிராஜ்.  ஆனால் இந்தத் திரைப்படங்கள்,

எல்லாம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை . ஆனால் இதன் பிறகு இவர் நடித்த லீ ,நாணயம் ,நாய்கள் ஜாக்கிரதை, மாயோன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இருந்தாலும் இவரால் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை,

பெற முடியவில்லை . அப்படி இருந்தும் தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிபி ராஜ்.  இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  சிபிராஜ் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிய பண்ணை வீடு ஒன்றை கட்டியிருக்கிறார் சிபிராஜ் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *