April 28, 2024

84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி ..!! வெளியானது அடுத்த படத்தின் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணி பின்னர் பிஸியான காமெடி நடிகராக மாறினார் . அது மட்டுமல்லாமல் இவரும் செந்திலும் இணைந்த பிறகு தான் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வந்தது . அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் இருவரும்,

நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது . இதன்பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த கவுண்டமணி பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் . அதன் பிறகு மீண்டும் நடிக்காமல் இருந்து வந்த கவுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக,

நடித்திருக்கிறார் . இதற்கும் கவுண்டமணிக்கு வயது 84 ஆகிறது . இந்த வயதிலும் ஹீரோவாக நடிப்பது இவராக மட்டும் தான் இருக்கும்.  இப்படி இருக்கும் நிலையில் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *