April 29, 2024

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்தின் முதல் போட்டோ ஷூட் இது தான் ..!! வெளியான அரிய புகைப்படங்கள் ..!!

விஜயகாந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்த விஜயகாந்த் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார்.  பின்னர் பல நாள் உழைப்புக்கு பலன் கிடைத்தது போல கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த் .

இருந்தாலும் இவருக்கு சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது . இதன் பிறகு தான் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார் . அதுவும் அப்போது தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி , கமலுக்கே பயத்தை காட்டினார்,

நடிகர் விஜயகாந்த் . குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.  இப்படி சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த விஜயகாந்த் அரசியலிலும் களமிறங்கி மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்திருந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சினிமா அரசியல் எதிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எடுத்த அரிய  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *