April 29, 2024

தளபதியும் , வருங்கால தளபதியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் . கடந்த சில வருடங்களாகவே இவருடைய நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வருகிறது.  இப்படி இருக்கும்போது கடந்த வாரம் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.  அதோடு இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை ,

என்றும் அறிவித்து  அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார் நடிகர் விஜய் . அப்படி அவருடைய கடைசி திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் அல்லது கார்த்திக் சுப்புராஜ் இருவரில் யாராவது ஒருவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் நடிகர் விஜய் ,

அரசியலுக்கு சென்று விட்டால் அவருடைய இடம் காலியாக தான் இருக்கும்.  குறிப்பாக விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  அப்படி தமிழ் சினிமாவில் அது போன்று இருப்பவர் என்றால் சிவகார்த்திகேயன் தான்.

இதனால் கண்டிப்பாக நடிகர் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *