April 28, 2024

90ஸ் கிட்ஸின் பேவரைட் ஹீரோவான “சக்திமானை” ஞாபகம் இருக்கா ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

அப்போதும் சரி இப்போதும் சரி, குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும் . அதுவும் 90ஸ் கிட்ஸ் எல்லாம்  சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் உயிராக இருந்து வந்தனர்.  அப்படி அப்போது ஆங்கிலத்தில் வெளியான எஸ்பிடி , பவர் ரேஞ்சர்ஸ் போன்ற சீரியல்களை பார்த்து வந்த தமிழ் ரசிகர்களுக்கு சக்திமான் என்ற இந்திய சீரியல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சீரியலை பார்த்ததிலிருந்து சக்திமான் சக்திமான் என்று அப்போது இருந்த பல குழந்தைகள் பித்து பிடித்துப் போய் திரிந்தார்கள் . அப்படி சக்திமான் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் முகேஷ் கண்ணா . இதை இவர் தான் தயாரித்திருந்தார் .

குறிப்பாக சக்திமான் மூலம் இந்திய அளவில் பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் முகேஷ் கண்ணா.  மேலும் இவர் சின்னத்திரை சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் . அதோடு இவர் ஹிந்தி ,தெலுங்கு,மலையாளம் மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் சமீப காலமாக சீரியல்  மற்றும் சினிமா இரண்டையும் விட்டு விலகி இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சக்திமானாக நடித்திருந்த முகேஷ் கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *