May 7, 2024

கமலின் ஆபீஸா இது ..?? திரும்புற பக்கமெல்லாம் ஒரே விருதா இருக்கு ..!! முதல் முறையாக வெளியான வீடியோ ..!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் . கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன் . பின்னர் படிப்படியாக மேலே வந்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டு வந்தார் . மேலும் இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து,

நடித்து வந்தார்.  இதுவே இவரை ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாக்கியது .இன்னும் சொல்ல போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு பல வேடங்களில் நடித்திருந்தது கமல்ஹாசன் மட்டும் தான் . குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை,

அறிமுகம் செய்து வைத்த பெருமையும் கமல்ஹாசனையே சேரும்.  இப்படி நடிப்பு அரக்கனாக இருந்து வந்த கமல்ஹாசனை தேடி பல உயரிய விருதுகள் வந்தது.  அந்த வகையில் கமல்ஹாசன் 4 தேசிய விருது, எட்டு தமிழ்நாடு மாநில அரசு விருது, மூன்று நந்தி விருது ,17 ஃபிலிம் ஃபேர் விருது ,

என்று பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.  பின்னர் ஒரு கட்டத்தில் எனக்கு இனிமேல் விருதே கொடுக்க வேண்டாம் என்றும் வளரும் நடிகர்களுக்கு அந்த விருதை கொடுங்கள் என்றும் பரிந்துரை செய்தார் கமல்ஹாசன்.  இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக,

கமல்ஹாசனின் ஆபீசில் இருக்கும் அவருடைய விருதுகளின் வீடியோ வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் இப்பதான் தெரியுது ஏன் கமல்ஹாசன் விருதே வேண்டாம் என்று சொன்னாருன்னு என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *