April 28, 2024

நம்ம தலைவரு 40 வயசு பின்னாடி போயிட்டாரு போல ..!! 30 வயசு இளைஞன் போல மாறிய சூப்பர் ஸ்டார் ..!! புகைப்படத்தை பார்த்து பயர் விடும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . குறிப்பாக 72 வயது ஆகியும் கூட இன்னும் இவருக்கு உண்டான மார்க்கெட் குறையவில்லை.  இதற்கு உதாரணம் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம்.  இந்தத் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து ,

பிரம்மாண்ட சாதனை படைத்தது . இதையடுத்து அடுத்ததாக இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ள தலைவர் 170 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி ,மஞ்சு வாரியர் ,துஷரா விஜயன் , ரித்திகா சிங் , விஜய் டிவி ரக்சன் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ,

அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார் .  இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக மரண தண்டனைக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட்,

புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம தலைவரு  40 வயசு பின்னாடி போயிட்டாரு போல , செம ஸ்டைலாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *