April 27, 2024

விஜய்க்கு முதலில் பார்த்த பெண் இவர் தானா ..?? சங்கீதாவால் எல்லாம் மாறிடுச்சு ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இயக்குனரும் நடிகருமான  எஸ் ஏ  சந்திரசேகரின் மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் படிப்படியாக மேலே வந்தார் நடிகர்  விஜய் . தற்போது இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர் .  இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். ஆனால் முதலில் இந்த பிரபலத்தின் மகளை தான் திருமணம் செய்ய இருந்தாராம் நடிகர் விஜய்.  அவர் வேறு யாருமில்லை விஜய்யின் தாய் மாமாவான ,

பாடகர் சுரேந்தரின் மகளை தான் . அந்த வகையில் பிரபல பாடகராகவும் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வந்தவர் எஸ் என் சுரேந்தர் அவர்கள் . இவர் மைக் மோகனின் திரைப்படங்களுக்கு எல்லாம் டப்பிங் பேசியிருக்கிறார் . மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது . திருமணமான இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  குறிப்பாக சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன்பு இவருடைய மகளான பல்லவியை தான் திருமணம் செய்ய இருந்தாராம்  நடிகர் விஜய் . ஆனால் அதற்குள் விஜய் மீது இருந்த காதலை ,

சங்கீதா சொல்லியதால் இது நடக்காமல் போய்விட்டதாம் . இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *