April 28, 2024

வருங்கால தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்க போகும் நடிகர்கள் ..!! இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் ..??

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் மொக்கை வாங்கி கொண்டிருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள் இளம் நடிகர்கள் அது யார் யார் என்று பார்ப்போம்.  இதில் முதலாவதாக உள்ளவர் பிரதீப்  ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் 100 கோடிக்கு மேல்,

வசூல் செய்து சாதனை படைத்தது . இதை அடுத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.  இவரை தொடர்ந்து மணிகண்டன். ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த மணிகண்டனுக்கு குட் நைட்,

திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இவர்களைத் தொடர்ந்து நடிகர் கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கி வரும் பிரபலங்களில்,

ஒருவராக இருந்து வரும் கவின்  நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . இவர்களைத் தொடர்ந்து ஜீவி பிரகாஷ் . இவர் நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும்,

தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்து விடுகிறது . இவர்களைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன், ஹரிஷ் கல்யாண் போன்றவர்களும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.  குறிப்பாக வருங்கால தமிழ் சினிமாவை இவர்கள் எல்லோருமே ஆட்டிப்படைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *