April 23, 2024

பிறப் பிலே யே கோடி ஸ்வ ரன் ..!! ஆனா ல் நடிக ர் ஜீவ ன் காணா மல் போ ன தற்கு கார ணம் இது தா ன் ..?? இ வரு க்கு போ ய் இப்படி யொரு பழக் க மா ..??

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள் சினிமாவிற்கு வந்த பிறகு தான் பணம் சம்பாதித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள் . ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் பிறப்பிலேயே கோடீஸ்வரராக இருந்து சினிமாவிற்கு வருவார்கள் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் ஜீவன்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான யூனிவர்சிட்டி என்ற ,

படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர்  ஜீவன் . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  இதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க என்ற படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் நடிகர் ஜீவன்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து திருட்டுப் பயலே ,நான் அவன் இல்லை என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களில் நடித்து த னக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஜீவன் .

மேலும் இவர் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட இவருக்கென்று ஒரு தனி வரவேற்பு உள்ளது . அதோடு இவர் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் ஆவார்.  அப்படி இருந்தும் சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்த ஜீவன் ஒரு கட்டத்தில் தவறான பழக்கங்களால்,

கெட்ட பெயரை சம்பாதித்தார்.  இதன் பிறகு தான் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது.  இதனால் கிட்டத்தட்ட ஏழு வருடமாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த ஜீவன் தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *