May 10, 2024

ஆணவம் அதிகம் தான் ..!! ஆனால் இந்த விஷயத்தில் இளையராஜா தான் நம்பர் ஒன் ..!! ஏ ஆர் ரகுமான் எல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாது ..!!

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த இளையராஜா தொடர்ந்து 16 வயதினிலே ,கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், சிகப்பு ரோஜாக்கள், ஆறிலிருந்து அறுபது வரை, உதிரிப்பூக்கள் ,ரோசாப்பூ ரவிக்கைக்காரி,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவருடைய பாடல்கள் எல்லாம் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது .  ஆனால் இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இளையராஜா அவ்வப்போது,

தன்னுடைய திமிரால் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார் . இருந்தாலும் இந்த விஷயத்தில் இளையராஜா மட்டும்தான் நம்பர் ஒன் . அந்த வகையில் அப்போது ஒரே நாளில் மூன்று பாடல்களை பதிவு செய்து விடுவாராம் இளையராஜா . குறிப்பாக ஒரு பாடலை 30 நிமிடத்தில்,

முடித்துக்கொடுத்து விடுவாராம் இளையராஜா . இதனாலையே இவரைப்பார்ப்பதற்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவம் கிடப்பார்களாம் . அதோடு இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்று சொன்னாலே அந்த படத்திற்கு கூடுதல் மவுசு எகிறி விடுமாம்.

மேலும் என்னதான் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் முதல் பல உயரிய விருதுகளை இசைக்காக வாங்கி இருந்தாலும் , இந்த விஷயத்தில் இளையராஜாவிடம் நெருங்க கூட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *