May 7, 2024

16 வயதில் சூப்பர் ஸ்டாருடன் ” பிக்பாஸ் ” விசித்ரா..!! பலரும் பார்த்திடாத புகைப்படம் ..!! அப்பவே எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா.  கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போர் கொடி என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார்   விசித்ரா. இருந்தாலும் இவர்  ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தலைவாசல் என்ற படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தேவர் மகன், அமராவதி, ரசிகன், வீரா ,

அமைதிப்படை ,முத்து ,வில்லாதி வில்லன், ரகசிய போலீஸ், பெரிய குடும்பம் , எட்டுப்பட்டி ராசா , சுயம்வரம் , உனக்காக எல்லாம் உனக்காக , ஜெயம்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை விசித்ரா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,

மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனிடையே திருமணமான இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் . பின்னர் திருமணமான பிறகு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் நடிகை விசித்ரா . இருந்தாலும் அவ்வபோது,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,  சீரியல்களிலும் தலைகாட்டி வந்தார் நடிகை விசித்ரா . இப்படி இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார் நடிகை விசித்ரா . இந்நிலையில் 16 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன்,

விசித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *