May 3, 2024

குறைபாடுள்ள என்னை வாழ்க்கை துணையாக மாற்றியதற்கு நன்றி..!! புதிய காதலியை அறிமுகம் செய்து வைத்த “பிக்பாஸ்” அபிஷேக் ராஜா ..!!

அபிஷேக் ராஜா ஓர் பிரபலமான தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியதாக பணியாற்றி வந்தார்  அபிஷேக் ராஜா . பின்னர் BEHINDWOOS  சேனலுக்கு மாறினார் . இதன் பிறகு தான் இவருடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய தொடங்கியது . பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான,

இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் அபிஷேக் ராஜா.  அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் அபிஷேக் ராஜா. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சக போட்டியாளர்களை ,

வெறுப்பேற்றினார் அபிஷேக் ராஜா  . அப்படி இருந்தும் கூட இவருக்கு இந்த நிகழ்ச்சி ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுத்தந்தது . இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணமான இரண்டு வருடங்களிலேயே ,

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதன்பிறகு தனியாக வாழ்ந்து வந்த அபிஷேக் ராஜா காதலர் தினத்தில் தன்னுடைய புதிய காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் . அந்த வகையில் புதிய காதலியின் புகைப்படத்தை பகிர்ந்து குறைபாடுள்ள என்னை,

வாழ்க்கைத் துணையாக மாற்றியதற்கு நன்றி , விட்டுக் கொடுக்காததற்கும் நன்றி என்று பகிர்ந்திருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் அபிஷேக் ராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *