May 1, 2024

மறைந்த வெற்றி துரைசாமியும் , அஜித்தும் உயிர் நண்பர்களா ..?? பலருக்கும் தெரியாத தகவல் உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . இவர் நடிப்பை தாண்டி பைக் ரேஸ்,  கார் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி அதன் மூலம் அஜித்துக்கு பழக்கமானவர்தான் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி.  சினிமா மீது ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி விதார்த் நடிப்பில் வெளியான

என்றாவது ஒரு நாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்த திரைப்படம் 43 விருதுகளை குவித்து சாதனை படைத்தது.  அதோடு அஜித்தின் கார் ரேஸ் ,பைக் ரேஸ் போன்றவற்றில் ஒரு முக்கிய உறுப்பினராக இருப்பவர் வெற்றி துரைசாமி.  இதனாலேயே அஜித்துக்கும் வெற்றிக்கும் ,

இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.  இப்படி இருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு லொகேஷன் பார்க்க சென்று இருக்கிறார் வெற்றி துரைசாமி.  அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த கார் ஆற்றில் விழுந்து,

விபத்துக்கு உள்ளானது . ஆனால் காரில் இருந்த எல்லோரும் மீட்கப்பட்டும் வெற்றி துரைசாமி மட்டும் எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லையாம்.  இதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் எட்டு நாளாக தீவிரமாக தேடி நேற்று முன்தினம் சடலமாக வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது.

இவருடைய திடீர் மரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தார்.  இந்நிலையில் அஜித்தும் , வெற்றி துரைசாமியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *