April 29, 2024

1000 கோடி வசூல் கன்பார்மா ..?? லியோ படம் எப்படி இருக்கு ..?? வெளிவந்த முதல் விமர்சனம் ..!!

இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் லியோ.  ஏற்கனவே விஜய்க்கு மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இந்த படத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் . இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் .

அதோடு இவருடன் இணைந்து சஞ்சய்  தத் , திரிஷா ,அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் ,சாண்டி மாஸ்டர் ,பாபு ஆண்டனி ,ஜார்ஜ் மரியான் போன்ற பல நடிகர் நடிகைகள்  நடித்து இருந்தனர்.  இந்தப் படத்திற்கு அனிருத்,

இசையமைத்திருந்தார் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் . குறிப்பாக விஜய் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது லியோ திரைப்படம் . மேலும் இந்தத் திரைப்படத்தை பார்த்த,

பல விமர்சகர்கள் முதல் பாதி மெதுவாக செல்வதாகவும்,  கொஞ்சம் உண்மை தன்மையுடன் இருந்ததாகவும் கூறினார்கள்.  ஆனால் இரண்டாம் பாதி ரசிகர்களை மிரட்டி விட்டதாம் . இன்னும் சொல்லப்போனால் நடிகர் விஜய் இந்த படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை ,

வெளிப்படுத்தி இருக்கிறாராம் .  இதனால் கண்டிப்பாக இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக லியோ திரைப்படம் அமையும் என்றும் ஆயிரம் கோடி வசூல் உறுதி என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *