April 29, 2024

அஜித் படத்தையே நிராகரித்த சாய் பல்லவி ..!! இதெல்லாம் ஒரு காரணமா ..?? கேள்வி எழுப்பும் அஜித் ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சாய் பல்லவி . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் . இதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் ஜி கே ,பாவ கதைகள் ,கார்கி போன்ற படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக இவருடைய நடிப்பு திறமையை பார்த்து பல முன்னணி நடிகர்களே தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்களாம் . ஆனால் நடிகை சாய் பல்லவிக்கு,

கதை பிடித்தால் மட்டும்தான் நடிப்பாராம் . அந்த வகையில் அஜித் படத்தைக் கூட ஒதுக்கி இருக்கிறார் சாய்பல்லவி.  அந்தத் திரைப்படம் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் . இந்த படத்தில் அஜித்துடன் பயணிக்கும்

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹுமா குரோஷி . இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சாய் பல்லவி தானாம். அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற,

காரணத்தினால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் . ஆனால் இந்த படத்தில் அஜித்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ , அதே அளவிற்கு நடிகை ஹுமா குரோஷிக்கும் முக்கியத்துவம் இருந்தது . இதை போய் எப்படி சாய் பல்லவி நிராகரித்தார் என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *