April 25, 2024

ஆர்யா 16 பெண்களை ஏமாற்றினாரா ..?? புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை ..!! கல்யாணத்துக்கு பிறகு வெளிவந்த உண்மை ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா.  கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உள்ளம் கேட்குமே ,கலாபக் காதலன் ,பட்டியல், வட்டாரம், ஓரம்போ, நான் கடவுள், சர்வம் ,மதராசபட்டினம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.  ஆனால் அதற்கு முன்பே இவருக்கு திருமணம் நடப்பதற்காக “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது .

அதில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர் . அதில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்யப் போகிறார் என்று தான் அந்த நிகழ்ச்சியே தொடங்கப்பட்டது . இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா கூறியதாவது ,ஆர்யாவுக்காக 16 பெண்கள்,

போட்டி போட்டு கடைசியில் மூன்று பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகினார்கள்.  ஆனால் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் மற்ற இருவரும் கஷ்டப்படுவார்கள் என்று தான் ஆர்யா மூன்று பேரையுமே திருமணம் செய்யவில்லையாம். குறிப்பாக ஆரம்பத்தில் ,

கலகலப்பாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மிகவும் எமோஷனலாக மாறிவிட்டது. அந்த நேரத்தில் ஆர்யாவின் மனநிலையையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  மேலும் என்னாலும் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார் நடிகை சங்கீதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *