April 28, 2024

விஜய் அண்ணா நடிக்கலைன்னு சொன்னா என்ன ..?? இதை வைத்து மனச தேத்திக்கலாம் ..!! சூப்பர் ஐடியா கொடுத்த ஜெயம் ரவி ..!!

விஜய் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  இன்னும் சொல்ல போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக விஜய்க்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது . இப்படி சினிமாவில் ஒரு நல்ல பெயருடன் இருந்து வந்த விஜய் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார் . அதோடு இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தார் விஜய்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் என்ன தான்  விஜய் அரசியலுக்கு வருவது அவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருந்தாலும் , அவர் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொன்னது விஜய் ரசிகர்களுக்கு ,

மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இனிமேல் அவரை திரையில் பார்க்க முடியாதா என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புலம்பினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து ரசிகர்களுக்கு சூப்பர் ஐடியா கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி .

அந்த வகையில் சைரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் , விஜய் அரசியல் குறித்தும் அவர் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொன்னது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, விஜய் அண்ணா அரசியலுக்கு ,

போனால் என்ன .? அவர் நடித்த எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் இருக்கிறது . அதை திரும்பத் திரும்ப போட்டு பார்க்கலாம் . அவர் ஏன் சினிமாவில் இல்லை என்று நினைக்கிறீர்கள் . இதை பண்ணுங்க என்று ரசிகர்களுக்கு ஐடியா கொடுத்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *