April 24, 2024

தியானம் செய்வது போல நடிக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா ..?? அட, இவர் சூப்பர் ஸ்டார் பட நடிகையாச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

சமீப காலமாக தமிழ் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . அப்படி ரஜினி பட நடிகையின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரித்திகா சிங் தான் . கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தன்னுடைய ,

திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ரித்திகா சிங் . இப்படி வெளியான முதல் படத்திற்கு தேசிய விருதை வென்றார் நடிகை ரித்திகா சிங் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ,

சிவலிங்கா, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே ,விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 160 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்,

நடிகை ரித்திகா சிங்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரித்திகா சிங் சிறுவயதில் தியானம் செய்வது போல நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *