May 6, 2024

எப்பவுமே பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

அனிருத் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.  தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய அனிருத் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து  விட்டார்  என்று தான் சொல்ல வேண்டும் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி,

கத்தி,  நானும் ரௌடி தான், வேதாளம் ,தானா சேர்ந்த கூட்டம், பேட்ட என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கி வரும் ரஜினி, கமல், விஜய், அஜித்,

சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் அனிருத் . இதனால் தற்போது அனிருத்துக்கு தமிழ் மொழியையும்  தாண்டி ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளிலும் பட வாய்ப்பு குவிந்து வருகிறது . மேலும் அனிருத் நடிகர் ரவி ராகவேந்திரா,

என்பவரின் மகன் ஆவார் . அனிருத்துக்கு அக்கா ஒருவரும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் இதுவரை யாருமே பார்த்திடாத இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *