May 11, 2024

தனுஷ் என்னிடம் இரண்டு கதை சொன்னார் ..!! நான் மறுத்துவிட்டேன் ..!! காரணத்தை சொல்லிய சூப்பர் ஸ்டார் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் . திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதை அடுத்து தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம் .இந்த படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில்,

ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் , நான் பெரிய இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி பழகிவிட்டதால், என்னுடைய மகளின் இயக்கத்தில் நடிக்க தயக்கமாக இருந்தது . குறிப்பாக கோச்சடையான் படத்தில் நடிக்கும் போது கூட ,

சௌந்தர்யாவுக்கு பதில் கே எஸ் ரவிக்குமாரை தான் ஆக்சன் , கட் சொல்ல சொன்னேன் . மேலும் தனுஷ் கூட எனக்காக இரண்டு நல்ல கதைகளை சொன்னார் .அருமையாக இருந்தது , ஆனாலும் இந்த காரணத்திற்காக நடிக்க மறுத்து விட்டேன் . அவரும் புரிந்து கொண்டார் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *