April 29, 2024

ஜெயிலர் வசூலை பீஸ் பீஸாக்கிய ஜவான்..!! அடேங்கப்பா , முதல் நாள் வசூலே இத்தனை கோடியா ..?? சூப்பர் ஸ்டாரின் சாம்ராஜ்யத்தை உடைத்த அட்லீ ..!!

கடந்த மாதம் பத்தாம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்தது .  இப்படி இருக்கும் நிலையில் நேற்று வெளியான ஜவான் திரைப்படம் ஜெயிலர் வசூலை பீஸ் பீஸாக்கியுள்ளது.  அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்,

நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜவான் . இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி ,தீபிகா படுகோன், பிரியாமணி ,சானியா மல்கோத்ரா ,யோகி பாபு போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . குறிப்பாக அட்லீ ஷாருக்கானை  வைத்து இயக்கியிருந்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  அப்படி ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி,

செய்து விட்டார் இயக்குனர் அட்லீ  . என்னதான் இந்த படத்தையும் இவர் காப்பியடித்து எடுத்திருந்தாலும் இந்த படம் ரசிகர்களை நன்றாகவே கவர்ந்திருக்கிறது .இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் இந்த திரைப்படம் ,

முதல் நாளிலேயே 125 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம் . ஆனால் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 98 கோடி தான் வசூல் செய்திருந்ததாம்.  இதனால் ஜவான் திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை தொடும் என்று கணிக்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *