April 29, 2024

திரி ஷா வேண்டா ம் ,அந்த ந டிகை தா ன் வே ண்டும் ..!! கவ ர்ச்சி நடி கைக் கு ஸ்கெ ட்ச் போட் ட அஜி த் ..!! அப்ப விடா முயற் சி பட ம் சூப் பர் ஹிட் தா ன் ..!! எந்த நடிகை தெரி யு மா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் அஜித்.  சமீபத்தில் இவரின்  நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதை அடுத்து இயக்குனர் மகிழ்  திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.  ஆனால் நடிகர் அஜித் திரிஷா வேண்டாம்,

என்று கூறிவிட்டாராம் . காரணம் ஏற்கனவே அஜித்தும் , திரிஷாவும் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா,  என்னை அறிந்தால் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர் . அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பதற்கு திரிஷா ஆர்வம் காட்ட வில்லையாம் .

இதனால் கவர்ச்சி நடிகைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார் நடிகர் அஜித்.  அவர் வேறு யாருமில்லை நடிகை தமன்னா தான்.  ஏற்கனவே தமன்னாவும் அஜித்தும் இணைந்து நடித்த வீரம் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைஅடுத்து இரண்டாவது முறையாக,

இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனர் . குறிப்பாக இந்த படத்திற்காக தமன்னாவை ரெக்கமெண்டேஷன் செய்ததே  நடிகர் அஜித் தானாம் . இதனால் விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *