April 26, 2024

ஒரே பெயரில் இரண்டு கட்சி ..!! விஜய்யின் “தமிழக வெற்றி கழகத்துக்கு” வந்த சோதனை ..!! கொந்தளிக்கும் TVK கட்சியின் தலைவர் ..!!

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே வாழ்த்துக்களை விட விமர்சனங்களை தான் அதிகம் சந்தித்து வருகிறார் . அந்த வகையில் கடந்த வாரம் “தமிழக வெற்றி கழகம்” என்ற தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் நடிகர் விஜய் . மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார் விஜய் . அப்படி அவர் வெளியிட்ட அறிக்கையில் ,

“தமிழக வெற்றி கழகம்” இடையில் “க்” வர வேண்டும் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர் . அதோடு விஜய் வெளியிட்ட அறிக்கையில் இருந்த எழுத்துப் பிழைகளையும் சுற்றி காட்டினார்கள் நெட்டிசன்கள்.  இப்படி இருக்கும் நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்,

நடிகர் விஜய் . அந்த வகையில் நடிகர் விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” கட்சியின் பெயரை சுருக்கினால் TVK  என்று வரும் . ஆனால் ஏற்கனவே TVK  என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதாம் .அதாவது “தமிழக வாழ்வுரிமை கட்சி”  இந்த கட்சியின் ஆங்கில சுருக்கமும் TVK  தான் .

இந்நிலையில் இந்த கட்சியின் தலைவரான வேல்முருகன் கூறியதாவது,  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் ஆங்கில சுருக்கமாக  TVK   என்று பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.  ஏற்கனவே “தமிழக வாழ்வுரிமை கட்சியை”  TVK  என்று ,

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம் . வருகின்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளோம் . இப்படி ஒரே பெயரில் இரண்டு கட்சி இருந்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என்று கூறியிருந்தார் வேல்முருகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *