April 29, 2024

லியோ படத்தின் ஒரு டிக்கெட்டை 1 லட்சம் கொடுத்து வாங்கிய நபர் ..!! என்னங்க சொல்லுறீங்க ..!! காரணத்தை கேட்டா நீங்களே ஆச்சிரியப்படுவீங்க ..!!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் என்று அழைக்கப்படும் விஜய்யின் முந்தைய படங்களான பீஸ்ட் , வாரிசு போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் லியோ படத்தை மலை போல் நம்பி இருந்தார் நடிகர் விஜய் . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அப்படி இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா ,சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் பாஸேவ் மேனன், மிஸ்கின் , பிரியா ஆனந்த் ,மன்சூர் அலிகான் ,சாண்டி மாஸ்டர் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் . இன்று வெளியான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களை பூர்த்தி,

செய்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் விஜய் ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்கள் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களை தான் கொடுத்து வருகின்றனர் . இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் ஒரு டிக்கெட்டை ஒரு லட்ச ரூபாய் க்கு வாங்கி இருக்கிறார் ஒருவர் . அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியின் முதல் டிக்கெட்டை லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் .

இவர் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியதற்கு முக்கிய காரணம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகம் தான் . அப்படி இந்த இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் தான் இவ்வளவு பணம் கொடுத்து  லியோ படத்தின் டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *