April 26, 2024

நான் அந்த நடிகையை காதலிக்கிறேன் ..!! ஓப்பனாக சொல்லிய “ஜெய் பீம்” மணிகண்டன் ..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் ,இயக்குனர், எழுத்தாளர் ,மிமிக்ரி கலைஞர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருபவர் மணிகண்டன் . கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 வில்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மணிகண்டன்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான், இன்று நேற்று நாளை ,காதலும் கடந்து போகும் ,எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா , சில்லுக்கருப்பட்டி போன்ற ,

பல படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால்,

கவர்ந்திருந்தார் நடிகர் மணிகண்டன்.  பின்னர் இவர் ஹீரோவாக நடித்த குட் நைட் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது லவ்வர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் மணிகண்டன்.  இப்படி இருக்கும் நிலையில்,

36 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் மணிகண்டன் லவ்வர் படத்தின் பேட்டியின்  போது அவரிடம் காதலைப் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த மணிகண்டன் எனக்கு சிறுவயதிலிருந்தே நடிகை நக்மாவை ரொம்ப பிடிக்கும் .

திருமணம் செய்தால் அவரை தான் திருமணம் செய்திருப்பேன் . இப்ப வரைக்கும் நான் நடிகை நக்மாவை காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகர் மணிகண்டன் . மேலும் நடிகை நக்மாவுக்கு 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *