April 28, 2024

15 வது நாளிலேயே லியோ வசூலுக்கு ஆப்பு ..!! இனி ஜெயிலரை முந்த வாய்ப்பே இல்ல ..!! தப்பிச்சது மீசை ராஜேந்திரனின் மீசை ..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 19ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய்தத், திரிஷா, அர்ஜூன், மிஷ்கின் , கௌதம் வாசுதேவ் மேனன் ,மன்சூர் அலிகான் ,பிரியா ஆனந்த் , மடோனா செப்பாஸ்டிங் போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்திருந்தனர் .  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான,

இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களை பூர்த்தி செய்தாலும்,  மற்ற ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறது . அந்த வகையில் வெறும்  12 நாளில் 540 கோடிக்கு மேல்,

வசூல் செய்து சாதனை படைத்தது லியோ திரைப்படம் . இப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி 15 நாட்களிலேயே மொத்த வசூலுக்கும் ஆப்பு வைத்துள்ளனர் சில விஷக்கிருமிகள் . அந்த வகையில் இப்போதும்  தியேட்டர்களில் நன்றாக ஓடி வரும் லியோ படத்தின்,

எச்டி பிரிண்ட் தற்போது இணையத்தில் திருட்டுத்தனமாக கசிந்துள்ளதாம்.  இதனால் லியோ படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்படையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . அது மட்டுமல்லாமல் இப்படியே போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை ,

லியோ படத்தால் முறியடிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் எது எப்படியோ மீசை ராஜேந்திரனின் மீசை தப்பிச்சது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *