April 30, 2024

அயலான் படம் நஷ்டமுன்னு யார் சொன்னது ..?? வெற்றிவிழாவை கொண்டாடி மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நேற்று நாளை பட இயக்குனரான  ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான் . கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தான் முடிந்தது.  மேலும் பல சிக்கல்களை தாண்டி தான் இந்த திரைப்படம் வெளியானது . இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து,

ரகுல் ப்ரீத்தி சிங் , சாராத் கேல்கர் , ஈசா கோபிகர், கருணாகரன் ,யோகி பாபு, கோதண்டம் , பானுப்பிரியா ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.கிட்டத்தட்ட  75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி கலவையான ,

விமர்சனங்களையே பெற்றது.  இருந்தாலும் பண்டிகை நேரத்தில் அயலான் திரைப்படம் வெளியானதால் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது . அந்த வகையில் இந்த திரைப்படம் 96 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது . ஆனால் பலரும் இந்தத் திரைப்படம்,

தோல்வி படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதோடு இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் என்றெல்லாம் பலரும் தேவையில்லாத கருத்துக்களை கூறிவந்தனர் . தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று ,

அயலான் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *