May 8, 2024

விவாகரத்து ஆனாலும் மனைவியை விட்டுகொடுக்காத தனுஷ் ..!! லால் சலாம் படத்திற்காக அவர் செய்த விஷயம் ..!! என்னா மனுஷன்யா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ் . குறிப்பாக இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் ,பாடகர் ,பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ,

ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ் .  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் இருவரும் பிரிந்து விட்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்து ஆனாலும்,

மனைவியை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார் தனுஷ்.  அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா.  அதன் பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்த ஐஸ்வர்யா ,

பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் ,விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் . நேற்று இந்தப் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இருந்தது . இதைப் பார்த்த தனுஷ் அந்த டிரைலரை ,

தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார் . தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *