May 7, 2024

திரு திருன்னு முழிக்கும் இந்த கடைசி குட்டி யாருன்னு தெரியுதா ..?? இப்ப இவர் பிரபலமான நடிகராச்சே ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெய் . கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஜெய் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சென்னை 6௦௦௦28 ,சுப்ரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .

இப்படி ஆரம்ப காலகட்டங்களில் நல்ல நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜெய்க்கு சமீபத்தில் வெளியான எந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  அப்படி இருந்தும் கூட தற்போது மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜெய்.

மேலும் வீட்டில் ஜெய் தான் கடைக்குட்டியாம்.  அவருக்கு மூன்று அக்காக்கள் உள்ளார்களாம்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜெய்யின் குடும்ப புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *