April 24, 2024

விஜயகாந்துக்கு ” புரட்சிக்கலைஞர் ” பட்டத்தை கொடுத்தது இவர் தானா ..?? காலத்துக்கும் நின்னு பேசும் பட்டம் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய நடிகராகவும் , அரசியல்வாதியாகவும் இருந்து வந்தவர் மறைந்த பிரபலம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  பிறப்பால் பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்தாலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார் விஜயகாந்த் . பின்னர் பல வருட போராட்டத்திற்கு பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .

பின்னர் இந்த படத்தை தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜயகாந்த்.  மேலும் விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் என்ற பட்டம் 100% பொருத்தமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த பட்டத்தை,

கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு  தானாம் . அந்த வகையில் தயாரிப்பாளர் தாணு தயாரித்த பல திரைப்படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த்.  அப்படி கூலிக்காரன் என்ற படத்தில் விஜயகாந்த் நடித்து வந்தாராம்.  அப்போது விஜயகாந்துக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் ,

என்ற பேச்சு எழுந்துள்ளது . மேலும் விஜயகாந்த் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதோடு  கலைப்புலி தாணு  கலைஞரின் தீவர  ரசிகராம்.  இதனால் எம்ஜிஆரிடம் இருந்து “புரட்சி” கருணாநிதியிடம் இருந்து “கலைஞர்” இரண்டையும் சேர்த்து,

“புரட்சிக்கலைஞர் ” என்ற பட்டத்தை கூலிக்காரன் படத்தில் கொடுத்து இருக்கிறார் தாணு . அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்ததும் தாணு என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *