May 6, 2024

எம் ஜி ஆருக்கு பிறகு இத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்களா ..?? வந்தே சுவடே தெரியாமல் போன பிரபலங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் இருக்கும் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர் .  இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் . பலமுறை முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆருக்கு பிறகு பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர்.  ஆனால் அது பல பேருக்கு தெரியாமலேயே போய்விட்டது . அந்த வகையில் எம்ஜிஆரின் சக போட்டியாளரான சிவாஜி “தமிழக முன்னேற்ற முன்னணி” என்ற,

கட்சியை தொடங்கினார் . ஆனால் கட்சி ஆரம்பித்த ஒரு வருடங்களிலேயே காணாமல் போய்விட்டது. இதன் பிறகு எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பாக்கியராஜ் “எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்திருந்தார் . இவரும் வந்த சுவடே தெரியாமல்,

போய்விட்டார் .  இவருக்கு பிறகு இயக்குனரும்,  நடிகருமான டி ராஜேந்தர் ” இலட்சிய திராவிட முன்னேற்ற  கழகம்” என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார் . ஆனால் இவராலும் அரசியலில் தாக்கு பிடிக்க முடியவில்லை . இதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார்.

எம்ஜிஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்களிலேயே ஜொலித்தவர் என்றால் அது விஜயகாந்த் மட்டும் தான். இவருக்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக் “மனித உரிமை காக்கும் கட்சி” என்ற கட்சியை  தொடங்கினார்.  ஆனால் ஆரம்பித்ததோடு சரி இந்தக் கட்சியும் காணாமல் போய்விட்டது .

இதன் பிறகு நடிகர் சரத்குமார் “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி” என்ற கட்சியை தொடங்கினார் . ஆனாலும் இவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை . இதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் “மக்கள் நீதி மையம்” என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.

இவர் மட்டுமல்லாமல் கருணாஸ் , மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களும் கட்சி வைத்துள்ளனர் . இவர்களுடைய வரிசையில் அடுத்ததாக விஜய் “தமிழக வெற்றி கழகம் ” என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார் . இவராவது அரசியலில் ஜொலிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *