May 2, 2024

நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ..!! வனிதாவுக்கு இந்த பட்டமா..!! இனிமேல் இவரை கையிலேயே பிடிக்க முடியாது ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்குத்தான் அடைமொழி பெயர் அதிகமாக இருக்கும் . ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் அடைமொழி இருக்கிறது . அந்த வகையில் கண்ணழகி மீனா, இடுப்பழகி சிம்ரன் ,  புன்னகை அரசி சினேகா போன்றவர்கள் பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலிருந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவருக்கு பிறகு வந்த எந்த நடிகைக்கும் பெயருக்கு முன்னால் எந்த பட்டமும் இல்லை .  இப்படி இருக்கும் நிலையில் வனிதாவுக்கும் புதிய பட்டத்தை வழங்கியுள்ளார்களாம் . அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக,

அறிமுகமானார் நடிகை வனிதா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை  வனிதா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் . இப்படி பிக் பாஸ் மூலம் பரபலமானதால் தற்போது ,

இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.  அந்த வகையில் தற்போது வைஜயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் போலீசாக நடித்திருக்கிறார் நடிகை வனிதா . சமீபத்தில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது . அந்தக் போஸ்டரில் “வைரல் ஸ்டார்” வனிதா என்று,

போடப்பட்டிருந்தது.  இனிமேல் இவர் நடிக்கும் படங்களில் இந்த பட்டம் போடப்படும் என்றும் கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் , வனிதாவுக்கு இந்த பட்டமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *