May 3, 2024

திரும்பவும் நடிக்க வந்த ஜனகராஜ்..!! என்ன இப்படி எலச்சு போயிட்டாரு ..?? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஜனகராஜ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஜனகராஜ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் /

அப்படி இவர் காமெடி நடிகராக நடித்த நிழல்கள் ,சிந்து பைரவி ,பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம் ,அக்னி நட்சத்திரம், ராஜாதி ராஜா, அபூர்வ சகோதரர்கள், நாயகன் ,கிழக்கு வாசல் ,அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

குறிப்பாக ரஜினி , கமலுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்திருந்தார்   நடிகர் ஜனகராஜ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் ஒரு கட்டத்தில்,

நடிப்பதை முற்றிலும் நிறுத்திய ஜனகராஜ் மீண்டும் 96 என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.  இதன் பிறகு ஒரு படம் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு மீண்டும் விலகி விட்டார் ஜனகராஜ் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது தாத்தா என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்,

நடிகர் ஜனகராஜ் . அவருடைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . காரணம் அநியாயத்துக்கு எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் ஜனகராஜ் . இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *