April 30, 2024

48 வயதாகும் சூர்யாவுக்கு ஜோடியாகும் 26 வயது நடிகை..!! படத்தின் பட்ஜெட் மட்டும் 500 கோடியா ..?? உச்சத்திற்கே செல்லப்போகும் சூர்யா ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் பல தரமான இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார் சூர்யா . அந்த வகையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா . இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ள புரணானூறு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் .

இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.  இப்படி அடுத்தடுத்து தரமான இயக்குனர்களின் படங்களில் சூர்யா கமிட் ஆகியுள்ளதால் இவருடைய மார்க்கெட் இன்னும் உச்சத்தை தொடும் என்று,

தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் 48 வயதாகும் சூர்யாவுக்கு 26 வயது நடிகை ஜோடியாக உள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஜான்வி கபூர் தான் . மறைந்த முன்னணி நடிகையான  ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர்,

தற்போது ஹிந்தி படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வருகிறார்.  குறிப்பாக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் ஜான்விகபூர் அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக உள்ளாராம்.  அந்த வகையில் பாலிவுட் இயக்குனர் மகாபாரத கதையை ,

பிரம்மாண்டமாக இயக்க உள்ளாராம்.  இந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம் . அவருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . குறிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *