May 2, 2024

விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டால் ..!! சிவகார்த்திகேயனின் இடத்தை இவர் பிடித்துவிடுவாரா ..?? தீயாய் வேலை செய்யும் நடிகர் ..!!

சின்னத்திரையில் இருந்து இன்று வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு வருபவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம். அந்த வரிசையில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் . அதுவும் அண்மைக்காலமாக இவர் நடித்து வரும்,

திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் விரைவில்  நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவதாக அறிவித்து இருந்தார் . அதோடு சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறியிருந்தார் .

இதனால் அவருடைய சினிமா இடம் காலியாக தான் இருக்கும் . அந்த இடம் கண்டிப்பாக சிவகார்த்திக்கேயனுக்கு  கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.  அப்படி சிவகார்த்திகேயன் விஜய்யின் இடத்திற்கு போய்விட்டால் சிவகார்த்திகேயன் இடத்தை ,

இந்த நடிகர் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.  அவர் வேறு யாருமில்லை நடிகர் கவின் தான் . இவரும் சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமானவர்தான்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து,

தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கவின் . இதனால் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனின் இடத்தை பிடித்து விடுவார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *